இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள பழமையான அல்-கோஷினி இஸ்லாமிய பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிடத்தின் நான்காவது தளத்தில் புதுப்பிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி அது திடீரென இடிந்து தரைமட்டமாகியது. அப்போது தரைத் தளத்தில் பல மாணவர்கள் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில், 60க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. இதுவரை 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை உறுதி செய்துள்ளது.
