கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில், த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக, தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுகிறதா எனக் கவனித்து வருவதாகவும், அவ்வாறானவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதனிடையே, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் உட்பட சில தவெக நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
