உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க், தனது நெட்பிளிக்ஸ் சந்தாவை இரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணங்களை விளக்கும்போது, “சிறுவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில், மாற்றுப்பாலின சார்பு உள்ளடக்கங்களை திணிக்கிறது” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், இயக்குநர் ஹமிஷ் ஸ்டீல் சமீபத்தில் சார்லி கிர்க்கின் கொலை குறித்து கிண்டல் செய்த சம்பவத்தையும் மஸ்க் கண்டித்துள்ளார்.
அவர் தனது கருத்தில்,“சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு நான் பணம் செலுத்த மாட்டேன். அதனால்தான் நெட்பிளிக்ஸ் கணக்கை இரத்து செய்தேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம், மஸ்க் ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள் மத்தியில் #BoycottNetflix என்ற ஹாஷ்டேக் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
