பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கை பயணத்திற்குப் பிறகு, தற்போது அதிகாரப்பூர்வமாக பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
Hurun India Rich List 2025 வெளியிட்ட தகவலின்படி, ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் (ரூ.12,490 கோடி) என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர், இந்தியாவின் மிகச் செல்வந்த நடிகராக மட்டுமல்லாமல், உலகளாவிய தரவரிசையிலும் முன்னேறியுள்ளார்.
திரைப்படங்களின் வெற்றி, பிராண்டு விளம்பரங்கள், வணிக முதலீடுகள் மற்றும் குறிப்பாக கோல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) கிரிக்கெட் அணியில் அவரது பங்குகள், அவரை இந்நிலையில் கொண்டு வந்த முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ஷாருக்கான் தற்போது பல சர்வதேச பிரபலங்களையும் விட செல்வந்தராகி, தனது ரசிகர்களிடையே மேலும் பெருமையை ஏற்படுத்தியுள்ளார்.
சினிமா, விளம்பரம் மற்றும் வணிகம் – மூன்றிலும் வெற்றி கண்ட ஷாருக்கான், “பாலிவுட்டின் கிங்” மட்டுமல்ல, இப்போது பில்லியனர் கிளப்பின் கிங் ஆகவும் மாறியுள்ளார்.
