பிக் பாஸ் தமிழ் சீசன் 9 துவங்கி தற்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இந்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே நிலைமை.
வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்கள் பலரும் தங்களது நடத்தை, உரையாடல், மற்றும் டாஸ்க் செயல்களில் காரணமாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சில ரசிகர்கள் இதை “18+ ஷோவாக மாறி வருகிறது” என குற்றம் சாட்டுகின்றனர்.
இதே சமயம், அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு புதிய வைல்டு கார்டு போட்டியாளர் நுழையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் யார்? பழைய சீசனில் இருந்து வருபவரா அல்லது புதிய முகமா?
இதற்கான பதிலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்! 😍
