நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து தெரிவித்த போது, எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் நலன்களை உணர்ந்து, தமிழர்களுக்காக உண்மையாக செயல்படும் ஜனாதிபதி ஒருவர் ஆட்சிக்கு வந்தால், அந்த அரசாங்கத்தில் பிரதமராக நான் பதவி வகிப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி ஒரு அரசாங்கம் வரப்போவது இல்லை என்பதும், அப்படி ஒரு அரசாங்கம் வரவேண்டும் என்பது எனது ஆசை என்பதையும் அவர் தெரிவித்தார்.
“நாமல் அடுத்த ஜனாதிபதி ஆகலாம்” என சிலர் கூறுகிறார்கள்; அதற்காக நான் அவருடன் இணைந்துவிட்டேன் என பரவும் செய்திகள் உண்மையல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நாமல் எமது இனத்தின் எதிரி, அவருடன் இணைந்தால், அது என் இனத்துக்கும், என் தந்தைக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
மேலும், தற்போதைய நிலையில் எதிர்க்கட்சி ஆட்சியில் வந்தால், கீழ் சுகாதார அமைச்சு பதவிக்கு தயார் நிலையில் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
