சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்ததன்படி, இலங்கைக்கு நேர்ந்த நெருக்கடி காலம் இறுதி நிலைக்கு வந்துள்ளது.
இதனால், எதிர்காலத்தில் நாட்டிற்கு புதிய பிரதிபலன்கள் (benefits) கிடைக்கச் செய்ய மறுசீரமைப்புகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு IMF இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்த தகவல், நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்திற்கிடையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில், இலங்கை முன்னெடுத்த வேலைத்திட்டங்களில் வலுவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அதற்கு தொடர்புடைய பிரதிபல்கள் தற்போது நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்திடம் கிடைக்கப்பெறுகின்றன.
