பொதுமக்கள் ஏற்காத எந்தச் சட்டமும் இனி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“மக்கள் ஒரு சட்டத்தை நிராகரித்தால், அந்த சட்டத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப சட்டங்கள் இயற்றிய காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மக்கள் நலனே முக்கியம்,” என அவர் வலியுறுத்தினார்.
இன்று (சனிக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளகரங்கில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கல்வி மறுசீரமைப்பில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
ஆசிரியர்கள் நாட்டின் எதிர்கால தலைமுறையை வடிவமைக்கும் சக்தி கொண்டவர்கள்.
எனவே கல்வி முறை மாற்றங்களில் அவர்களின் பங்களிப்பு அத்தியாவசியம்,” என குறிப்பிட்டார்.
