யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை – தும்பளை மணியகாரன் சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.
பருத்தித்துறை சாலையிலிருந்து பொற்பதிக்கு பயணிகளை ஏற்றி சென்ற அரச பேருந்து, தும்பளை மணியகாரன் சந்தி வழியாகச் சென்றபோது, எதிரே துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த நபர் திடீரென வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பேருந்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
