யாழ்ப்பாணம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி பிரச்சினை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக சர்வதேச நீதி கோரி, வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று நிறைவடைந்தது.
வடக்கு–கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது.
மேலும், போராட்ட நிறைவுநாளான இன்று, சம்பந்தப்பட்ட விவரங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கை, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்
