இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணி சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) புதிய தரவரிசையில் 193வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை அணியின் சிறப்பான செயல்திறனும், அண்மையில் பெற்ற வெற்றிகளுமே இந்த முன்னேற்றத்திற்கு காரணமாகியுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட 2025 பட்டியலின்படி, இலங்கை அணி 862.17 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. இதற்கு முன்பு, அணி 205வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்ற ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றியும், சில முக்கிய போட்டிகளில் பெற்ற சமநிலைகளும் இலங்கையின் தரவரிசையில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இத்துடன், இந்த முன்னேற்றம் இலங்கை கால்பந்து உலகில் ஒரு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது. 🏆
