இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை கடந்த எட்டு மாத காலப்பகுதியில், மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில், வாகன இறக்குமதிக்கான செலவுகள் மாதந்தோறும் அதிகரித்து வந்துள்ளதையும், அவற்றில் அதிகபட்ச செலவினம் ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 255.7 மில்லியன் டொலர்கள் வாகன இறக்குமதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மாதந்தோறும் வாகன இறக்குமதிக்கான செலவுகள் பின்வருமாறு உள்ளன:
- ஜனவரி – 29.1 மில்லியன்
- பெப்ரவரி – 22.3 மில்லியன்
- மார்ச் – 54.0 மில்லியன்
- ஏப்ரல் – 145.6 மில்லியன்
- மே – 125.2 மில்லியன்
- ஜூன் – 169.6 மில்லியன்
- ஜூலை – 206.0 மில்லியன்
- ஆகஸ்ட் – 255.7 மில்லியன்
