எப்பாவல பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மற்றும் அவரது மகன், ஒரு ஹோட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயின் கையிருப்புடன் கைது செய்துள்ளனர்.
எப்பாவல – தெடகல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 54 மற்றும் 22 வயதுடைய எப்பாவல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

👍