வட மாகாணத்தில் தீபாவளி நாளன்று அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு, வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த கோரிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தேவையான அறிவிப்புகள் மது வரித் திணைக்களத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் மதுபான விற்பனையை தடை செய்ய வேண்டும் என்ற இந்து சமய அமைப்புகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
