க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி நாள் அக்டோபர் 9 என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 18ஆம் திகதி முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் 9ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு எந்தவொரு விண்ணப்பமும் ஏற்கப்படாது என்றும், கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
- 📞 011-2784537
- 📞 011-2785922
- 📞 011-2784422
- 📞 011-2784208
