மொனராகலை – ஹுலந்தாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் (01/10/2025) சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்ததாக கூறப்படும் மூன்று மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை வளாகத்துக்குள் மது அருந்திக் கொண்டிருந்தபோது அவர்கள் பிடிபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது குறித்த மாணவர்கள் மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
