இளைஞர் கழகங்களுக்கு இடையிலான மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் இறுதி ஆட்டம் இன்று (04/10/2025) துரையப்பா விளையாட்டரங்கில் அதிரடியான சூழலில் நடைபெற்றது.
இறுதி போட்டியில் கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச இளைஞர் தெரிவு அணிகள் மோதியபோது, இரு அணிகளும் திறமையுடன் போராடின. கடும் போட்டியின்போது, ஆட்ட நேர முடிவில் கரவெட்டி அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாவட்ட சம்பியன் பட்டத்தை வென்றது.
கரவெட்டியின் வெற்றிக்கான கோலை ஆர்த்திகன் பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதற்கு முன்னரும் இவ்விரு அணிகள் மாவட்ட இறுதி போட்டியில் மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது போலவே, இன்றும் ரசிகர்கள் ஆரவாரத்துடன்நடைபெற்று சிறப்பாக முடிவடைந்தது.
🥇 கரவெட்டி இளைஞர்களின் அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் உறுதியான ஆட்டம் — இன்றைய வெற்றியின் ரகசியம்! 🏆
