போர்த்துகல் தேசிய அணியின் முன்னணி வீரரும் உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமுமான கிரிஸ்டியானோ ரொனால்டோ, வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் சுட்டி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, ரொனால்டோ தற்போது 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த சொத்து மதிப்புடன் பில்லியனாதிபதியான முதல் கால்பந்தாட்ட வீரர் என அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
2023 ஜனவரியில் சவூதி ப்ரோ லீக்கில் இணைந்த அவர், ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் சம்பளம் பெற்று வருகிறார்.
