கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குடும்பப் படம் ‘இட்லி கடை’ இன்று (01) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தான் இயக்கியும் நடித்தும் இருக்கிறார். அவருடன் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர்.
திரைப்பட விமர்சகர்கள் கூறுவதன்படி, முதல் பாதியில் வரும் தனுஷ் – ராஜ்கிரண் காட்சிகளே படத்தின் சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு கதை சற்று ஊகிக்கக்கூடிய வகையில் நகர்வதே குறையாகச் சொல்லப்படுகிறது.
எதுவாக இருந்தாலும், நடிகர்கள் அனைவரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது என்றும், இயக்குநராக தனுஷ் காட்டிய ஆர்வம் மற்றும் புது முயற்சி பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிடப்படுகிறது.
குடும்ப பாங்கான கதைக்களம் என்பதால், ‘இட்லி கடை’ படத்தை அனைத்து தரப்பினரும் திரையரங்கில் குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய படமாகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
