இந்தியாவின் அயோத்திய் நகரில், சரயு நதிக்கரையில் வருடந்தோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தீபோற்சவம் நடைபெறும் வழக்கம் உள்ளது.
இந்த ஆண்டும் நேற்று (18) முதல் 20 ஆம் திகதி வரை தீபோற்சவம் களைகட்ட உள்ளது. நிகழ்ச்சியில் சுமார் 26 இலட்சம் விளக்குகள் ஏற்றப்படும் திட்டமிடப்பட்டுள்ளது, இதன் மூலம் கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், விழாவில் ட்ரோன்கள் பறக்கவிடுதல், லேசர் விளக்குகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்தப்படுவதும் பார்வையாளர்களை கவரும் விதமாக அமையும்.
இந்த தீபோற்சவம், பாரம்பரியத்தை கௌரவிக்கும் விதமாகவும், சுற்றுலா அருவை பிரபலப்படுத்தும் விதமாகவும் நடத்தப்படுகிறது.
